கே.என்.பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் பள்ளத்துமேடு பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு ஒருவர் மது விற்று கொண்டிருந்தார். இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் கே.என்.பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த செந்தில் (வயது40) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.