மது விற்றவர் கைது

நெல்லையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-12 19:20 GMT

நெல்லை பெருமாள்புரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். தியாகராஜநகர் ரெயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகப்படும் படியாக ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் நாங்குநேரியை சேர்ந்த சந்திரன் (வயது 47) என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்