மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-14 18:11 GMT

விராலிமலை:

விராலிமலை அருகே மாதிரிபட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த வானதிராயன்பட்டி அத்திப்பள்ளத்தை சேர்ந்த மாமுண்டி மகன் கோபால் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்