மதுபானம் விற்றவர் கைது

கூடலூர் அருகே மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-24 18:45 GMT

கூடலூர் அருகே லோயர்கேம்ப் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பகவதி அம்மன் கோவில் அருகே பையில் மதுபாட்டில்களுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், குமணன் தொழு மன்னூத்து பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 38) என்பதும், அரசு மது பாட்டில்களை மொத்த விலைக்கு வாங்கி சில்லறையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்