உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது 60), அப்பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகில் மது விற்றது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.