திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 92 லட்சத்துக்கு மதுவிற்பனை

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 92 லட்சத்துக்கு மதுவிற்பனை

Update: 2023-01-02 18:45 GMT

புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 92 லட்சத்துக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

109 டாஸ்மாக் கடைகள்

திருவாரூர் மாவட்டத்தில் 109 டாஸ்மாக் கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மது விற்பனை செய்யப்படும். இதில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக ஆங்கில புத்தாண்டு பிறப்பை மது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வதால் மதுவிற்பனை அதிகமாக நடைபெறும்.

ரூ.1 கோடியே 92 லட்சம்

அதன்படி 2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல மடங்கு அதிகரித்தது. மது ரசிகர்களின் உற்சாகத்தினால் மது, பீர் வகைகள் என மொத்தம் ரூ.1 கோடி 92 லட்சம் மதிப்பிலான மதுவகைகள் விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுவிற்பனை குறைந்துள்ளது. எந்த பண்டிகை நிகழ்ச்சியானாலும் போதை ஆர்வத்தால் மதுவிற்பனை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்்த ஆண்டு ரூ.2 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்