காஞ்சீபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-20 15:40 IST

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, வெண்குடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). இவர் கள்ளச்சாராயம் விற்றதாக வாலாஜாபாத் போலீஸ் நிலையம், மற்றும் காஞ்சீபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. அதன்படி கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஜாமீன் பெற்று மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.

இதையடுத்து தொடர் குற்றச்செயலில் ஈடுபடும் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையை ஏற்று கள்ளச்சாராய வியாபாரி கணேசனை ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்தார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்த அறிவிப்பாணையை ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கள்ளச்சாராய வியாபாரி கணேசனுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் வழங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்