டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு
நல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே நல்லூர் கிராமத்தில் விவசாய நில பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளரான வந்தவாசியை சேர்ந்த ராமன் என்பவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டுச் சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு இந்த கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் மதுக்கடை சுவரில் துளையிட்டிருப்பதை கண்டு தெள்ளார் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.