பெண்ணுக்கு ஆயுள்தண்டனை

மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-09-22 18:33 GMT


கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 28). இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனவேதனை அடைந்த பரமேஸ்வரி கடந்த 9.9.2020 அன்று தனது 9 வயது மகள் கரிஷ்மாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரமேஸ்வரி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆயுள் தண்டனை

இதற்கிடையில் இது பற்றி அவரது கணவர் சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து, பரமேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி கீதாராணி தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் பரமேஸ்வரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்