விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-07 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கி வந்த மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகையையும், உயர் கல்விக்கு செல்லும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகையை நிறுத்திய மத்திய அரசைக் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேந்தர் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், சாத்தான்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலாளர் தமிழ்க்குட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியர் மகாபால்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கிறிஸ்தவ சமூகநீதி பேரவையின் மாவட்ட அமைப்பாளர் செங்கோல்மணி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்