தூத்துக்குடியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-21 18:45 GMT

தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் தூத்துக்குடி மேட்டுப்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அகமது இக்பல் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஹாஜா, வட்ட செயலாளர்கள் முகமது, அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் கலை இலக்கிய கழக மாநில செயலாளர் கோவன், காங்கிரஸ் திருச்சி வேலுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வில்லவன் கோதை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் சுந்தரி மைந்தன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முகமது ஜான், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் சம்சுதீன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சேமா.சந்தணராஜ், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தாஸ், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித், ஏகத்துவ ஜமாத் மாவட்ட தலைவர் அப்பாஸ், தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிராகவன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முனியசாமி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்