விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் சேதம்: பாடாலூர் போலீஸ் நிலையம் முற்றுகை

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் சேதப்படுத்தியதை கண்டித்து பாடாலூர் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.;

Update:2023-10-20 00:50 IST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அம்பேத்கர் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை நேற்று ஒரு கும்பல் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அம்பேத்கர் நகரை சேர்ந்த அக்கட்சியினர் பாடாலூர் போலீஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை பேச்சுவார்த்தை நடத்தி கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்