சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக பள்ளிக்கு திரும்புவோம் என்ற நிகழ்ச்சி விரைவில் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக பள்ளிக்கு திரும்புவோம் என்ற நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திங்கட்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் ரோந்து பணியை அதிகரித்து உள்ளோம். மாவட்டத்தில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவதற்காக 170 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் போலீஸ் துறை சார்பில் மாற்றத்தை தேடி என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இதனை தொடர்ந்து சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக பள்ளிக்கு திரும்புவோம் என்ற நிகழ்ச்சியை விரைவில் தொடங்க உள்ளோம். இந்த நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.