மாவீரன் ஒண்டி வீரனின் நினைவை போற்றி வணங்குவோம் - எல். முருகன்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Update: 2024-08-20 03:26 GMT

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட, இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான 'மாவீரன் ஒண்டிவீரன்' அவர்களின் 253-வது நினைவு தினம் இன்று.

மாவீரர் பூலித்தேவனின் படையில் படைத்தளபதியாக இருந்தவர், எதையும் தனித்து துணிச்சலுடன் எதிர் கொண்டவர்.

தனியொருவராக சென்று ஆங்கிலேயப் படைகளை வலிமையுடன் எதிர்கொண்டவர். ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுப்பு தெரிவித்த காரணத்திற்காக, தங்கள் ஊரான நெற்கட்டான் செவ்வயலை தாக்க வந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து, பூலித்தேவரோடு இணைந்து தலைமை தாங்கி வெற்றி கண்டார்.

வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்து, விடுதலைப் போரில் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, தன்னந்தனியே பகைவர்களை வென்ற 'மாவீரன் ஒண்டிவீரன்' அவர்களது நினைவை போற்றி வணங்கிடுவோம்..!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்