வெள்ளப்பெருக்கு குறைவு: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

Update: 2023-11-05 06:23 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலையில் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று மாலை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்