புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் எல்.இ.டி. திரையில் நேரடி ஒளிபரப்பு

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் எல்.இ.டி. திரையில் நேரடி ஒளிபரப்பப்பட்டது.

Update: 2023-08-03 19:16 GMT

சென்னையில் 7-வது ஹீரோ ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. 16 ஆண்டுகளுக்கு பின் இப்புகழ் பெற்ற ஆக்கி போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது. இப்போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கண்டுகளிக்கும் வகையில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் எல்.இ.டி. திரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொரியா- ஜப்பான் இடையேயான முதலாவது போட்டியினை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வினை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் பார்வையிட்டனர். பொதுமக்கள் இப்போட்டிகளை வருகிற 12-ந் தேதி வரை போட்டி நடைபெறும் நாளில் நேரடியாக கண்டுகளிக்கலாம். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட கால்பந்து கழக துணை தலைவர் சந்திரசேகர், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்