ஊரு விட்டு... ஊரு வந்த... தடுப்புகள்

ஊரு விட்டு... ஊரு வந்த... தடுப்புகள்

Update: 2023-06-04 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி நடந்த கண்காட்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கடந்த 31-ந் தேதி கோடை சீசன் முடிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். இந்தநிலையில் கோடை சீசனின் போது, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக பிற மாவட்டங்களில் சாலையோர தடுப்புகள் ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அவை தற்போது சாலையோரங்களில் கிடக்கிறது. ஊட்டி கலெக்டர் அலுவலகம் பகுதியில் சத்தியமங்கலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தடுப்புகள் உள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பாதுகாப்பு பணிக்காக ஊரு விட்டு ஊரு வந்து போலீசார் பணியாற்றினர். சாலை தடுப்புகள் எதற்காக இவ்வளவு தூரம் கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. தற்போது இந்த தடுப்புகள் இங்கேயே இருக்குமா? அல்லது மீண்டும் அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுமா என்பதும் தெரியவில்லை. சாலை தடுப்புகளை நீலகிரிக்கு கொண்டு வந்து, மீண்டும் கொண்டு செல்லும் செலவு கணக்கிடும் போது, இங்கேயே ஏற்பாடு செய்திருக்கலாம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்