ஒருதலைக்காதல்; திருப்பூரில் பட்டப்பகலில் அரசு பெண் வழக்கறிஞர், மகளை அரிவாளால் வெட்டிய வழக்கறிஞர்

கோவையில் பட்டப்பகலில் பெண் வழக்கறிஞர் மற்றும் அவரின் மகளை ஒரு நபர் அரிவாளால் வெட்டியுள்ளார்.

Update: 2022-09-20 14:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ஜமீலா பானு (வயது 42). இவரது மகள் அமுர்நிஷா (வயது 20). அமுர்நிஷா சேலம் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார்.

இதனிடையே, திருப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஜமீலா பானு தனது வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தார். அவருடன் மகள் அமிர்நிஷாவும் உடன் இருந்துள்ளார்.

அப்போது, அந்த அலுவலகத்திற்கு அரிவாளுடன் வந்த இளைஞர் அரசு வழக்கறிஞர் ஜமீலாவையும் அவரது மகள் அமுர்நிஷாவையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார்.

அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ஜமீலாவும், அமுர்நிஷாவும் அலறியுள்ளர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ரத்தக்காயங்களுடன் இருந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அரசு வழக்கறிஞர் ஜமீலா மற்றும் அவரது மகளான சட்டக்கல்லூரி மாணவி அமுர்நிஷாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற அப்துல் ரஹ்மான் (வயது 25) என்ற இளைஞரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

கேரளாவில் தலைமறைவாக இருந்த அப்துல்லை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜமீலாவின் மகளான அமுர்நிஷா படித்து வரும் சேலம் சட்டகல்லூரியிலேயே கைது செய்யப்பட்ட அப்துல் படித்துள்ளார். அதன் பின்னர் வழக்கறிஞராக பணியை தொடங்கிய அப்துல் மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

அதேவேளை, சட்டக்கல்லூரியில் படிக்கும்போது அமுர்நிஷாவை அப்துல் ஒருதலைப்பட்சமாக காதலித்துள்ளார். தனது காதலை அமுர்நிஷாவிடம் அப்துல் தெரிவித்துள்ளார். ஆனால், அப்துல்லின் காதலை அமுர்நிஷா மறுத்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லைகொடுத்ததையடுத்து கடந்த மாதம் அப்துல் மீது அமுர்நிஷா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல்லை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

சிறையில் இருந்த அப்துலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமின் கிடைத்துள்ளது. ஜாமின் கிடைத்ததையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஜாமில் வெளியே வந்த அப்துல் தனது காதலை நிராகரித்த சட்டக்கல்லூரி மாணவி அமுர்நிஷா மற்றும் அவரது தாய் அரசு வழக்கறிஞர் ஜமீலாவை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜமீலாவின் அலுவலகத்திற்கு அரிவாளுடன் சென்ற அப்துல் அங்கு இருந்த ஜமீலா மற்றும் அவரது மகள் அமுர்நிஷாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

தற்போது கேரளாவில் தலைமறைவாக இருந்த அப்துல்லை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்