அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-02 18:45 GMT

மேல்மலையனூர், 

மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு விளக்குபூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உற்சவ அம்மனை மேள, தாளம் முழங்க விளக்கு பூஜை செய்யும் இடத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு அங்கு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்