சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் வறண்டு வரும் ஏரி, குளங்கள்
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் வறண்டு வரும் ஏரி, குளங்கள்
சுட்டெரிக்கும் வெயிலால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டு வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
கடந்த 2 ஆண்டுகளாக சேதுபாவாசத்திரம் கடைமடையில் வெள்ள சேதம் ஏற்படும் அளவிற்கு மழை பெய்து ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. இதனால் கடந்த 2 ஆண்டாக ஏரி பாசன சாகுபடி சிறப்பாக நடைபெற்றது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் 10 அடிக்கு உயர்ந்தது. கடந்த 3 மாதங்களாகவே கடைமடையில் மழை பெய்யவில்லை. தற்போது கடந்த 1 மாதமாக கடைமடையில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறையவாய்ப்பு
இதனால் நாள் ஒன்றுக்கு ஏரி, குளங்களில் 2 அடி முதல் 5 அடிவரை தண்ணீர் குறைந்து வருகிறது. மேலும் சிறிய குளம் முதல் பெரிய ஏரி வரை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த ஆண்டும் மழையின்றி காணப்பட்டால் ஆழ்குழாய் கிணறுகளில் 10 அடியாக உள்ள நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.