லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-08-21 18:10 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திக் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் கார்த்திக் நாட்டறம்பள்ளியை அடுத்த புத்துக்கோயில் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் மாலையில் மோட்டார் சைக்கிளில் நாட்டறம்பள்ளி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

ஆத்தூர்குப்பம் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடததி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்