பொள்ளாச்சியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

பொள்ளாச்சியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

Update: 2023-03-30 18:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கதிர்வேல் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாளும் அவரது மகளும் வீட்டில் இருந்து உள்ளனர். அப்போது அங்கு வந்த கதிர்வேல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் அவர் அரிவாளால் மாரியம்மாளை வெட்டியதாக தெரிகிறது. இதில்படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்

கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கதிர்வேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்