தர்மபுரி:-
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனுறை ஆனந்த நடராஜர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடந்தது. சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.