சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் நீதிமன்றம் அருகே உள்ள சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் விமான கோபுரங்களுக்கும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், கோ பூஜை, நான்கு கால பூஜை, பூர்ணாகுதி நடந்தது. பாலாஜி சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் இசை வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு சென்று மூலஸ்தான விமானம் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் 21 வகையான அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. மேலும் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, உள்ளிட்ட சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.