பள்ளிபாளையம் நாகர்புற்றுகோவில் கும்பாபிஷேகம்
பள்ளிபாளையம் நாகர்புற்றுகோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் புதன்சந்தைபேட்டை காவிரிகரையில் மிக பழமையான நாகர்புற்றுகோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜையும், நேற்று காலை நாகர்புற்றுகோவில் கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் விநாயகருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.