காட்டுமன்னார்கோவிலில் துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காட்டுமன்னார்கோவிலில் துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் மற்றும் 2, 3-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று காலை கோபூஜை, 4-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி பூஜைகள் முடிந்து புனிதநீர் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர விமானத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சங்கம், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும், உடையார்குடி கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.