காஞ்சீபுரத்தில் சித்திரகுப்த சாமி கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கர்ணகி அம்பாள் உடனுறை சித்ரகுப்த சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2023-05-05 08:41 GMT

கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் மே 1-ந்தேதி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. யாகசாலையில் 16 குண்டங்கள் அமைக்கப்பட்டு 34 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் நடத்தினார்கள். நேற்று யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீர்க்குடங்களை மங்கல இசை வாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு எடுத்துச்சென்றனர்.

பின்னர் மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதி புனிதநீரை கோபுரக்கலசங்களில் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக இரவு கோவிலில் கர்ணகி அம்பாளுக்கும் சித்ரகுப்த சாமிக்கும் திருக்கல்யாணமும் பின்னர் சாமி வீதி உலாவும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ரகுராமன், உறுப்பினர்கள் சந்தானம், ராஜாமணி மற்றும் கோவில் செயல் அலுவலர் அமுதா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்