குமரி: மீன்பிடிக்க சென்ற மீனவர் படகில் மயங்கி விழுந்து பலி

குமரி அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-18 14:16 GMT

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பெபியான்ஸ் (வயது 52 ). இவர் ,அதே பகுதியை சேர்ந்த சபரீஸ்கான், ரூபின் மற்றும் லூஜின் என நான்கு பேர் பைபர் படகில் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

படகானது கரையில் இருந்த கடலுக்குள் சிறிது தூரம் சென்றபோது பபியான்ஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படகினுள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே சக மீனவர்கள் படகுடன் கரை திரும்பினர்.

அங்கிருந்து அவரை மீட்டு நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடலுக்கு தொழிலுக்கு சென்ற நேரத்தில் மயங்கி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்