புத்தூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

கோகோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற புத்தூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

Update: 2023-01-12 18:45 GMT

கொள்ளிடம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான கோகோ விளையாட்டு போட்டி நடந்தது. இதில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களை சேர்ந்த 15 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் சசிகுமார், உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் மற்றும் அனைத்துத்துறை ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்