மாநில குத்துச்சண்டை போட்டியில் வென்ற சேலம் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

Update: 2023-02-07 19:30 GMT

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில குத்துசண்டை போட்டி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றனர். இதில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு போட்டியில் ஹித்தேஷ், சுதர்சனன் வெள்ளிப்பதக்கமும், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு போட்டியில் லட்சுமண மூர்த்தி வெண்கலப்பதக்கமும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கிரியோதிகா, லக்ஷனா ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை ேசலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கத்தின் சேர்மனும், சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் சேர்மனுமாகிய சரவணன் வாழ்த்தினார். அவர்களுடன் உடற்கல்வி இயக்குனர் சங்கர், பொதுச்செயலாளர் பிரேம்குமார், பயிற்சியாளர் விவேக், ஆதித்தன் ஆகியோரும் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்