மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு

நெல்லையில் மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2022-07-03 17:07 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புறக்கோட்டத்தில் 2020-2021 மற்றும் 2021-2022 ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மின்மாற்றிகளை பழுதில்லாமல் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதற்காக மேலப்பாளையம் பிரிவு ஒன்று மற்றும் மேலப்பாளையம் பிரிவு இரண்டு பிரிவு அலுவலர் மற்றும் ஊழியர்களின் பணியினை பாராட்டி செயற்பொறியாளர் முத்துக்குட்டி, மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் வைத்து பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சார்லஸ் நல்லத்துரை, உதவி மின் பொறியாளர்கள் கார்த்திக், ரத்தினவேணி, ஜெயந்தி, மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்