போலீசாருக்கு பாராட்டு

போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-07-23 18:59 GMT


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி தலைமையிலும், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் மேற்பார்வையிலும் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 18 பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 135 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 20 உயரமான கட்டிடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர் திருவிழாவின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் திருட்டு சம்பவங்கள் எதுவும் நிகழாமல் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்