தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
திருச்சி மாவட்ட கல்வித்துறை சார்பில் மாநில அளவில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் 38 மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டது. தஞ்சை கமலா சுப்ரமணியம் மெட்ரிக் பள்ளியில் பவ்யஸ்ரீ என்ற மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஏ. ஒய். ஏ. ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பயிற்சி பெற்று வந்த பவ்யஸ்ரீ ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு இறுதிபோட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற மாணவியை கிளப் உரிமையாளர்கள் மார்ட்டின், ஜோன்ஸ் மற்றும் டென்னிஸ் பயிற்சியாளர்கள் சந்திரபோஸ், மோரிஸ்ராஜ் ஆகியோர் பாராட்டினர். தங்கம் வென்ற மாணவி திருவாரூரை அடுத்த அம்மையப்பனில் உள்ள அ.சி.மணிமாறன் நினைவு லிட்டில் ரோசஸ் பள்ளி தாளாளர் ஏ. எஸ் .ராமச்சந்திரன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.