திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-03-14 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியனில் ஊரகப் பகுதி அளவில் நடந்த திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புளியங்குடி நகர்மன்ற உறுப்பினர் சங்கரநாராயணன் கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு நினைவுப்பரிசு சான்றிதழ்களை புளியங்குடி லயன்ஸ் கிளப் நிர்வாகி முரளிதரன் வழங்கினார். மேலும் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர்கள், பயிற்சி வழங்கிய உதவி ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் நவீன் செய்திருந்தார். முடிவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்