இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Update: 2022-09-02 14:12 GMT


விநாயகர் பெருமான் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். விநாயக சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்தில் பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி உள்ளிட்ட 34 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குடிமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பெதப்பம்பட்டியில் இருந்து உடுமலை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொழுமத்தில் கரைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்