கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

Update: 2023-05-19 18:45 GMT

விருத்தாசலம்

விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. நேற்று வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர், வெள்ளி காப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் நேற்று கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்