கிருஷ்ணகிரி புதுப்பேட்டை துளுக்காணி மாரியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழாவையொட்டி நேற்று கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் வீடுகளில் இருந்து கூழ் கொண்டு வந்து மாரியம்மன் கோவிலில் ஊற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டன.
இதையொட்டி துளுக்காணி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல், புதுப்பேட்டை ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கூழ் ஊற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.