கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி செயலாளர் ஷீலா ராணி முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கி பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கிராமப்புறங்கள் மற்றும் மலை கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா, சுகாதார பணிகள் நடந்து வருகிறதா என்பதை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும். மழைநீர் வீடுகளுக்குள் புகாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ஷேக் ரஷீத், மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.