கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் பகுதியில்சுதந்திர தினவிழா

கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-08-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் பகுதியில் நேற்று சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினவிழா

கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் கா. கருணாநிதி தலைமை வகித்து கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ- மாணவிகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள், ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் நகரசபை ஆணையாளர் கமலா மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ. அலுவலகம்

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கவர்னகிரி தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி கருப்பசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

கோர்ட்டு

கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சப்-கோர்ட் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் குற்றவியல் நீதிபதி கடற்கரைச் செல்வம், வழக்கறிஞர்கள் சந்திரசேகர், கார்த்தீபராஜ், குருநாதன், கோர்ட் அமீனா மாரியப்பன், சிறஸ்தார் சுப்புலட்சுமி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். குலசேகரன்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சொர்ணபிரியா துரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் கணேசன், ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூல்தீன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாதவன்குறிச்சி

மாதவன்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர்த.சேர்மத்துரை தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி உறுதிமொழி எடுத்தார். இதில் துணை தலைவர் கருப்பசாமி, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஊராட்சி உறுப்பினர் பால் தங்கம், மாதவன்குறிச்சி இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைதெரஸ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மணப்பாடு

மணப்பாடு ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் தலைவர் கிரேன்சிட்டா வினோ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் முகமது சாலிக் அசார் கலந்து கொண்டனர்.

நயினார்பத்து ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் தலைவர் அமுதவல்லிதேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஜார்ஜ் செல்வின் சகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலகம்

குலசேகரன்பட்டினம் காங்கிரஸ்கட்சி சார்பாக நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் தேசியகொடியேற்றப்பட்டது இதில் கட்சி நிர்வாகிகள் கொண்டனர். உடன்குடி வட்டார துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

குலசேகரன்பட்டினம் அரசு நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் சுடலை மணி தேசிய கொடியை ஏற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியை நமாதவன் ஏற்பாடு செய்திருந்தார்.

போலீஸ் நிலையம்

குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், ஐயப்பன், ரவிக்குமார், கிருஷ்ணன், முனியாண்டி உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க. கட்சி சார்பில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகி ஆசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்