கொமாரபாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா; பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

கொமாரபாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா; பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

Update: 2023-06-08 20:53 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கம்பம் மற்றும் பொங்கல் விழா கடந்த மாதம் 24-ந் தேதி அன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வழக்கமாக மற்ற கோவில்களிலும் கம்பம் 3 கிளைகள் உடையதாக இருக்கும். ஆனால் இக்கோவிலில் 2 கிளைகள் உள்ள கம்பம் நடப்படுவது தான் வழக்கம்.

இந்த கம்பத்தை சுற்றி தினமும் இரவு 9 மணியில் இருந்து 12 மணி வரை இளைஞர்கள் கம்பத்தை சுற்றி ஆடி வந்தார்கள். நேற்று முன்தினம் இரவு பவானி ஆற்றில் இருந்து தீர்த்துக்குடம் எடுத்துவரப்பட்டது.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணி அளவில் சத்தியமங்கலத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் மாகாளியம்மன் உற்சவ அம்மன் ஒரு வேனில் அலங்கரித்து கொமராபாளையம் மாகாளியம்மன் கோவில் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று இரவு 8.30 மணிக்கு கம்பம் பிடுங்கி பவானி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் சப்பரத்தில் அலங்கரித்து உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 15-ந் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்