ஊஞ்சலூர் அருகே பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா

ஊஞ்சலூர் அருகே பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா

Update: 2022-12-30 21:08 GMT

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே ஆராம்பாளையம் கிராமத்தில் வலம்புரி விநாயகர், பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பொங்கல் திருவிழா 27-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28-ந் தேதி அம்மனுக்கு பச்சை மாவு படையல் இடப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து விநாயகர், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் இரவு 7 மணி அளவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்