ஆதிரெத்தினேசுவரர் கோவில் திருவிழா கொடியேற்றம்

திருவாடானை ஆதிரெத்தினேசுவரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

Update: 2022-06-04 18:00 GMT

தொண்டி, 

திருவாடானை ஆதிரெத்தினேசுவரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருவிழா

திருவாடானையில் சினேகவள்ளி சமேத ஆதிரெத்தினே சுவரர் கோவில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி சாமி, அம்பாள் கோவிலில் இருந்து பரிவார தெய்வங்களுடன் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து சாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங் களுக்கும் கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், கிராம நாட்டார்கள், பொதுமக்கள் முன்னிலையில் கொடி யேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, ராஜ மரியாதை, நாட்டார் மரியாதை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பூஜைகளை சொர்ண சந்திரசேகர குருக்கள், சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து வைகாசி விசாக திருவிழா தொடர்பாக தேவஸ்தான சரக பொறுப் பாளர், குருக்கள், அலுவலர்கள், மற்றும் நாட்டார்களின் கூட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நாட்டார்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முதல் நாள் இரவு மண்டகப்படியையொட்டி சாமி, அம்பாள் பரிவார தெய்வங்களுடன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பரிவார தெய்வங்களுடன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 11-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்