கம்பட்டராயர் பண்டிகை கொண்டாடிய கோத்தர் இன மக்கள்
கோத்தர் இன மக்கள் கம்பட்டராயர் பண்டிகையை கொண்டாடினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான கம்பட்டராயர் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். குன்னுார் அருகே கொல்லிமலை கிராமத்தில் கோத்தர் இன மக்கள் அய்யனோர் அம்மனோர் கோவிலில் கடந்த வாரம் பண்டிகை தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெண்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து தங்கள் குல தெய்வத்தை வரவேற்கும் வகையில் இசை கருவிகளை இசைத்து நடனம் ஆடினர். பண்டிகையையொட்டி கடைசி 3 நாட்கள் வீட்டிற்கு செல்லாமல், கோவில் வளாகத்திலேயே தங்கி பூஜை செய்தனர்.