கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா
பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தில் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு ஆராதனை மற்றம் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள அங்கே திரண்டு நின்ற பக்தா்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தனியங்களையும், ரூபாய் நாணயங்களையும் சுவாமிக்கு சூறையாடி நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பழங்கள் மற்றும் மாலைகளை அணிவித்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. இதில் பெண்ணைவலம், அம்மாவாசைப்பாளையம், பூசாரிபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தாிசனம் செய்தனர். தொடர்ந்து அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.