கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கிழக்கு மண்டல இளைஞர் அணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் சக்தி கோச் நடராஜன், மாநில வர்த்தக அணி செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவீரன் தீரன் சின்னமலைக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும். ஓடா நிலையில் நடைபெறும் தீரன் சின்னமலையின் நினைவு நாள் விழாவில் கரூர் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கலந்து கொள்வது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கரூர்- கோவை சாலையை 6 வழியாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் மீனாட்சி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.