கொல்லிமலையில்வல்வில் ஓரி விழாவுக்கு அமைப்புகள் செல்ல ஒரு வழிப்பாதை200 போலீசார் பாதுகாப்பு

Update: 2023-07-31 19:00 GMT

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் நடைபெற உள்ள வல்வில் ஓரி விழாவுக்கு அமைப்புகள் செல்ல ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஒருவழி பாதை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை ஆட்சி செய்த வல்வில் ஓரியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் அங்குள்ள வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க பல்வேறு அமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு 29 அமைப்பினர் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் சேந்தமங்கலம் பகுதியில் சில சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் தகராறில் ஏற்பட்டதால் இந்தாண்டு கொல்லிமலை வல்வில் ஓரி விழாவுக்கு செல்ல ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

அதன்படி சிலைக்கு மாலை அணிவிக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாற்றுப்பாதையில் முள்ளுக்குறிச்சி வழியாக கீழே இறங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலை பகுதியில் 5 இடங்களில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். இதற்கிடைய வல்வில் ஓரி சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் காரவள்ளி, நாச்சியம்மன் கோவில், குழிவளவு பஸ் நிறுத்தம், முள்ளுக்குறிச்சி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்