கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விவரம் வெளியீடு

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-01-31 02:52 GMT

சென்னை,

சென்னையில் இருந்து தென் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து விரைவு பஸ்கள் உள்பட அரசு பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டுச்செல்ல தொடங்கின.

இந்த சூழ்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் பயணம் செய்ய விரும்பும் பஸ் பயணிகளுக்கான நடைமேடை குறித்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

நடைமேடை - 1

கன்னியாகுமரி, செங்கோட்டை, திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம்.

நடைமேடை - 2

உடன்குடி, கருங்கல், கன்னியாகுமரி, குட்டம், குலசேகரம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, திருவனந்தபுரம், நாகர்கோவில், பாபநாசம், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

நடைமேடை - 3

ராமேசுவரம், ஏர்வாடி, தொண்டி, ஒப்பிலன், கமுதி, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை, தேவகோட்டை, பரமக்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரசோழன்.

நடைமேடை - 4

கம்பம், கரூர், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பொள்ளாச்சி, போடிநாயக்கனூர், மன்னார்குடி.

நடைமேடை - 5

அரியலூர், ஒரத்தநாடு, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், துறையூர், நன்னிலம், நாகை, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், பேராவூரணி, மயிலாடுதுறை, மன்னார்குடி, வேளாங்கண்ணி,

நடைமேடை - 6

ஈரோடு, ஊட்டி, கரூர், குருவாயூர், கோவை, சேலம், எர்ணாகுளம், திருப்பூர், திருவாரூர், நாமக்கல், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்.

நடைமேடை - 7

செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, மேல்மலையனூர், போளூர், வந்தவாசி.

நடைமேடை - 8

அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலூர், விழுப்புரம், ஜெயங்கொண்டம்.

நடைமேடை - 9

கடலூர், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், திட்டக்குடி, புதுச்சேரி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம்.

சில ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், இடையே உள்ள ஊர்களில் நிற்காமல் செல்லும். அப்படிப்பட்ட பஸ்கள் ஒரு நடைமேடையிலும், அதே ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், இடையே நின்று செல்வதால் அவை வேறு நடைமேடையில் நிறுத்தப்படுகின்றன.




 



Tags:    

மேலும் செய்திகள்