வீடு புகுந்து 10-ம் வகுப்பு பள்ளி மாணவி கடத்தல்

Update: 2023-04-23 19:30 GMT

எடப்பாடி:-

எடப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் மாணவி வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி மாணவியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்று விட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர், மாணவியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் எடப்பாடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி, வாலிபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்