பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி உதை

பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி உதை விழுந்தது.;

Update:2023-09-30 00:15 IST

ராமநாதபுரம் சூரங்கோட்டை காலனியை சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 50). இவரிடம் பெரியார் நகரை சேர்ந்த ரவி(50) இடம் வாங்கி தருவதாக கூறி கடந்த 4 வருடமாக ரூ.6.70 லட்சம் பணம் மற்றும் 30 பவுன் நகைகளை பெற்றாராம். இந்த நிலையில் இடத்தையும் முடித்து தராமல், பணத்தையும், நகையையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விஜயராகவன், ரவியின் வீட்டிற்கு சென்று பணம், நகை கேட்டபோது, ரவி மற்றும் அவரது மனைவி இந்திரா(47) ஆகியோரின் தூண்டுதலின்பேரில் ரவியின் நண்பர்களான செந்தில்(40), கபார்கான்(36) ஆகியோர் விஜயராகவனை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிந்து செந்தில், கபார்கான் ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்