காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு இருந்தது.

Update: 2023-03-26 22:35 GMT

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே மீன் வியாபாரம் களை கட்டியது. மீன் பிரியர்களுடன், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், மீன் விற்பனை செய்யும் பெண்கள், ஏற்றுமதியாளர்கள் என ஏராளமானோர் அதிகாலை முதலே ஏலம் எடுக்க குவிந்தனர்.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசை படகுகள் குறைந்த அளவே கரை திரும்பியதால் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று மீன்களின் விலை சற்று உயர்ந்து இருந்தது.

கடந்த வாரம் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.750-க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.900-க்கு விற்பனையானது. துண்டுகளாக கழிவுகள் நீக்கி வெட்டப்பட்ட மீன் ரூ.1000-க்கு விற்கப்பட்டது, ரூ.1200 ஆக இருந்தது.

இதேபோல் வெள்ளை வவ்வால் ரூ.1150-க்கும், கருப்பு வவ்வால் ரூ.850-க்கும், சங்கரா ரூ.450-க்கும், கடல் விரால் ரூ.400-க்கும், சுறா ரூ.600-க்கும், இறால் ரூ.450-க்கும், நண்டு ரூ.450-க்கும், கொடுவா ரூ.600-க்கும், பாறை ரூ.500-க்கும், காணங்கத்தை, கேரை உள்ளிட்ட மீன்கள் ரூ.300 முதல் 450 ரூபாய் வரையும் விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று 50 முதல் 200 ரூபாய் வரை கூடுதலாக விலை உயர்ந்து இருந்தது. எனினும் மீன்பிரியர்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்